Saturday, August 20, 2011

என்பதற்காக


அன்பே
நான் பசிக்காமலேயே உண்ணுகிறேன்
உனக்கு பசிக்குமென்பதால்
உறக்கம் வராமலேயே உறங்குகிறேன்
உனக்கு உறக்கம் வருமென்பதால்
அதனால்தான் அன்பே
நான் உன்னை காதலிக்கிறேன்
நீயும் என்னை
காதலிக்க வேண்டும் என்பதற்காக

காதல்தான்


உயிரே
கற்றுக் கொடுக்காமலே வருவது காதல்
பார்த்தவுடன் வருவதும் காதல்தான்
பழகியபின் வருவதும் காதல்தான்
அன்பை வழங்குவதும் காதல்தான்
பிரிந்த பின்பு துடிப்பதும் காதல்தான்
ஒரு தலையாய் வருவதும் காதல்தான்
மொத்தத்தில்
உயிரனத்தையே உருவாக்குவதும்
காதல்தான்