Tuesday, June 21, 2011

கண்ணீர் கூட

என்னவளே
நான் உனக்காக
சிந்தும்
கண்ணீர் கூட
பன்னீர் தான்............!

தெரியவில்லை

அன்பே
உன்னை நினைத்து
துடிக்கும் என்
இதயத்திற்க்கு
உன் நினைவுகளை
விலக்க தெரியவில்லை

தெரியவில்லை

அன்பே
உன்னை நினைத்து
துடிக்கும் என்
இதயத்திற்க்கு
உன் நினைவுகளை
விலக்க தெரியவில்லை

மிகப் பெரியது

அன்பே
என் இதயம்
மிகச் சிறியாதாய்
இருக்கலாம்
ஆனால் - அதில்
உள்ள உன் நினைவுகள்
மிகப் பெரியது

கொடியது

அன்பே
மரணத்தை விட
மிகவும் கொடியது
உன் பிரிவு

எனக்கு மட்டுமே

அன்பே
நீ மணமாக இருந்திருந்தால்
மலருக்குச் சொந்தம்
நீ நிலவாயிருந்தால்
வானத்துக்கு சொந்தம்
ஆனால் - நீ
பெண்ணாயிருப்பதால்
எனக்கு மட்டுமே சொந்தம்

மனதின் மென்மை

அன்பே
வண்டாய் இருந்திருந்தால்
தெரிந்திருக்காது
மெல்லிய மலராய்
உன் மனதின் மென்மை
தேவை அப்போது
தேன் மட்டுமாய் இருந்திருக்கும்
இதழ் மேல் படிந்த
காலைப் பனித்துளியாய்
உன்னில் நான்
சில காலமே இருந்து
கால் வெயிலாய் பிரிந்தாலும்
எனக்கு தெரியுமடி
உம் மனதின் மென்மை

சொல்லாத கவிதைகளா?


அன்பே
இங்கும் , பேப்பரும்
இலவசமாக கிடைத்திருந்தால்
உன்னை வர்ணித்து
கோடி கவிதையெழுதி
குவித்திருப்பேன்
ஆனாலும் அன்பே
உன் கண்கள்
சொல்லாத கவிதைளையா
நான் காகிதத்தில்
சொல்லி விடப்போகிறேன்

உன் இதயம்

அன்பே
நீ காதலுக்கே
காதலிக்க
கற்றுக்கொடுத்தவள்
மின்சாரத்தின் முகவரி
உன் கண்கள்
அருவியின் முகவரி
உன் சிரிப்பு
பூக்களின் முகவரி
உன் இதழ்கள்
சாந்தத்தின் முகவரி
உன் முகம்
என் முகவரி
உன் இதயம்