Thursday, June 16, 2011

இதயத்திருடி

அன்பே
உன்னை திருடி
என்று சொல்கிறேன்
ஏனென்றால் - நீ தான்
என் இதயத்தை
திருடியவளாயிற்றே

நீதானே

அன்பே
என் காதல் பள்ளி
நீ தான்
ஏனெனில்
என்க்கு - காதல் பாடம்
கற்றுக் கொடுத்தது நீ தானே

நினைவுகள்

அன்பே
ஏன் என்னை
கொல்லாமல் கொல்கிறாய்
தூக்கத்திலும்
தூங்காமல் கொடுமைப்படுத்துகிறது
உன் இனிய
அன்பான நினைவுகள்

நீ

அன்பே
என் கனவிலும் நீ
என் நினைவிலும் நீ
என் உயிரிலும் நீ
என் இதயத்திலும் நீ
மொத்ததில்
என்னில் நீ

யார் சொன்னது ?

அன்பே
மெளனத்திற்கு
மொழியில்லையாம்
யார் சொன்னது ?
உன் மெளனம் கூட
எனக்கு - ஆயிரமாயிரம்
மொழிகளை கற்றுத்தந்தது

உன்னைப்பார்த்த பிறகு

அன்பே
என் கண்கள் கூட
புன்னகைக்க
கற்றுக்கொண்டது
உன்னைப்பார்த்த பின்புதான்

தோல்வியில்லை

அன்பே
காற்றுக்கு வேலியில்லை
வானுக்கு எல்லையில்லை
அலைக்கு ஒய்வில்லை
ஆசைக்கு வயதில்லை
அதன் பிறகு தடையில்லை
அதுபோல் நம்
காதலுக்கு தோல்வியில்லை

உன்னுடன்

அன்பே
இந்த உலகமே
அற்பமாய்த் தோன்றியது
உன்னுடன் வாழ்ந்தபோது……!

நானில்லை

அன்பே
நிலவின்றி வானில்லை
நீரின்றி மீனில்லை
கடலின்று அலையில்லை
வார்த்தையின்றி கவிதையில்லை
கண்களின்றி பார்வையில்லை
இதயமின்றி துடிப்பில்லை
காற்றின்றி சுவாசமில்லை
அது போல் அன்பே
நீயின்றி நானில்லை

வாங்கினேன்

அன்பே
உன்னைப் பார்க்கவே - நான்
கண்கள் வாங்கினேன்
உன்னைச் சுவாசிக்கவே - நான்
நாசியை வாங்கினேன்
உன் குரலைக் கேட்கவே - நான்
செவிகள் வாங்கினேன்
உன் வழி நடக்கவே - நான்
கால்கள் வாங்கினேன்
உன் கரம் பற்றவே - நான்
கைகள் வாங்கினேன்
உன் நினைவுகளை சுமக்கவே - நான்
இதயம் வாங்கினேன்
உன்னுடன் இணையவே - நான்
உயிரை வாங்கினேன்

இருக்கும் வரை

அன்பே
காதல் புனிதமானதுதான்
உண்மைக் காதலர்கள்
இருக்கும் வரை
நானும் புனிதமானவன் தான்
உன் நினைவு
என்னுள் இருக்கும் வரை………..!

வாழத்துடிக்கிறேன்

உயிரே
மலர் ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
மலரினும் மென்மையானவள்………….!
நிலவு ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
நிலவினும் ஒளிமயமானவள்……………!
நெருப்பு ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
நெருப்பினும் பிரகாசமானவள்…………!
தேன் ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
தேனினும் இனிமையானவள்……….!
கடவுள் ஆணானால்
அவர் - உன்னுடன்
வாழத்துடிப்பார்
ஏனெனில் - நீ
கடவுளினும் தூய்மையானவள்……….!
கடல் ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
கடலினும் பெரியவள்…….!
தென்றல் ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
தென்றலினும் இதமானவள்………..!
அதனால்தான்
அன்பே
நானும் உன்னுடன்
வாழத்துடிக்கிறேன்
ஏனெனில் - நீ
எனக்கு உயிரானவள்…..!!!!!!!!

மாற்றமில்லை

அன்பே
உன் வெற்றுப்பார்வை - என்னில்
ஆயிரம் ஆயிரம்
கவிதைகளை தோற்றுவிக்கின்றன.
ஆனால்
என் காதல் பார்வை - உன்னில்
எவ்வித மாற்றத்தையும்
ஏற்படுத்தாதது ஏனோ?

என் துணை

அன்பே
நீ எப்போதும்
என்னுடன் இருக்கும் நிழலாய்
இரு
என்று சொல்ல
விரும்பவில்லை
ஏனெனில்
இருளில் நிழலின் நிலை என்ன?
அதானால்
நீ எப்போதும்
என்னுடன் இருக்கும்
என் துணையாய் இரு….!

விரும்புகிறேன்

அன்பே
நான் சிப்பிக்குள்
முத்தாய்
இருப்பதை விட
உன்னுள் உயிராய்
இருக்க விரும்புகிறேன்

என் ராணி

அன்பே
உனக்காக தாஜ்மஹால்
கட்ட ஆசைதான்
ஆனால் நான்
பணக்காரன் இல்லை
எனவே , உனக்காக்
என் இதயத்தில்
காதல் கோட்டை கட்டியுள்ளேன்
அதில் உன் முகம் பார்க்கிறேன்
என் காதல் கோட்டைக்கு
மட்டுமில்லை
எனக்கும் ராணி நீ தான்

காதல் கவிதை

உயிரே
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
என் சுவாசக் காற்றே
என் இதயத்தில் உன்க்கு
கோவில் கட்டினேன்
ஆனால்
நீ என்னை
கண்களால் கைது செய்தாய்
ஆனந்த பூங்காற்றே
என் நேசம் முழவதும் உனக்கு
புன்னகை பூவே
உன்னை நினைத்து
என்னை மறந்தேன்
என் முகவரி உன் இதயம்
பூவே உனக்காக
காலமெல்லாம் காத்திருப்பேன்
ஏனென்றால் என்
காதல் கவிதை நீயென்பாதால்

மறுக்கிறாய்



அன்பே
உன் மின்னல் பார்வை - என்னை
மின்சாரமாய் தாக்குதடி
உன் இனிய குரல் - என்னை
இசையாய் ஒலிக்குதடி
உன் கொழுசின் ஒசை - என்னை
கொல்லாமல் கொல்லுதடி
உன் ஒவ்வொரு அசைவும் - என்னில்
காதலைத் தூண்டுதடி
இதயத்தை திருடிக்கொண்டு
இதழ் திறக்க மறுக்கிறாய்

எனக்கு தெரியாது

அன்பே
நீ புன்னகை வீசினாலும்
காதலிப்பேன்
நீ நெஞ்சைப் புண்ணாக்கினாலும்
காதலிப்பேன்
நான் உன்னால் இறந்து போனாலும்
காதலிப்பேன்
உயிரோடு என்னை எரித்தாலும்
காதலிப்பேன்
ஆனால் எதற்க்கு?
அது அதுதான் எனக்கு தெரியாது

காதல் வாழ்க

உயிரே
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
சந்தித்த நாளில்
மனதை பறிகொடுத்து
என்னில் நீயாய்
உன்னில் நானாய்
வாழச் செய்த
"காதல் வாழ்க"

ரசித்தவன்



அன்பே
நீ பிரம்மன்
எழுதிய கவிதையானாலும்
ரசித்தவன்
நான் மட்டும்தான்...!