Wednesday, June 22, 2011

உன் பெயர்

அன்பே
பிஞ்சுப் பிள்ளை நெஞ்சில்
பால் வாசம்
மேகம் தூரத்தயாரானால்
மண் வாசம்
கடற்கரை காற்றிலெல்லாம்
காதல் வாசம்
என் தோட்டத்தில் பூத்திருக்கும்
பூவெல்லாம் உன் வாசம்
உலகின் மிகப்பெரிய
கவிதை எது என்று
எனக்கு தெரியாது
ஆனால்
உலகின் மிகச்சிறிய
கவிதை தெரியும்
அது உன் பெயர்

நீயிருந்தால்

அன்பே
வானம் கூட
தொட்டுவிடும் தூரம்தான்
கடல் கூட
அளந்துவிடும் ஆழம்தான்
ஆம், உண்மைதான்
என்னருகே நீயிருந்தால்

உன்னை மட்டுமே

அன்பே
நிலவு பிடிக்கவில்லை
உந்தன் நினைவு பிடித்திருக்கின்றது
மலர்கள் பிடிக்கவில்லை
உந்தன் மனம் பிடித்திருக்கின்றது
குயில் பிடிக்கவில்லை
உந்தன் பார்வை பிடித்திருக்கின்றது
வார்த்தைகள் பிடிக்கவில்லை
உந்தன் கவிதை மட்டுமே
பிடித்திருக்கின்றது
உலகம் பிடிக்கவில்லை
உன்னை மட்டுமே பிடித்திருக்கிறது

பாரம்தான்

அன்பே
பார்வை இல்லாவிடில்
கண்களுக்கு இமைகூட
பாரம்தான்
நிலவு இல்லவிடில்
வானுக்கு இரவுகூட
பாரம்தான்
நீர் இல்லாவிடில்
கடலுக்கு மீன்டகூட
பாரம்தான்
பசியில்லை என்றால்
வயிற்றுக்கு உணவுகூட
பாரம்தான்
நீ இல்லாவிடில்
என் உடம்புக்கு
உயிர் கூட பாரம்தான்

வயப்படத்தோன்றும்

அன்பே
உன் கண்களை
பார்க்கும் எவர்க்கும்
காதல்
வயப்படத்தோன்றும்

மணியோசை

அன்பே
என் காதுகளில்
ஓயாமல் ஒலிக்கிறது
உன் அழைப்புடன் அலறும்
தொலைபேசியின் மணியோசை

நினைத்தபோது

அன்பே
என் தந்தையின் கண்டிப்பும்
என் அன்னையின் அரவணைப்பும்
மறந்து போனது
உன்னை நினைத்த போது

நிச்சயம்

அன்பே
மின்னல் தாக்கினால்
மரணம் நிச்சயம்
அதுபோல்
உன் கண்கள் தாக்கினால்
காதல் நிச்சயம்

சொல்கின்றனவே

அன்பே
உதடுகள் மட்டும்தான்
கவிதை சொல்லுமா?
உன் கண்கள் கூட
கவிதை சொல்கின்றனவே

உன்னை சுவாசிக்கிறேன்

அன்பே
நான் காற்றை
சுவாசிக்கவில்லை
உன்னை சுவாசிக்கிறேன்

நீயே

அன்பே
உன் நினைவுகளே
என் சந்தோசம்
நீயே என் வாழ்க்கை
உன் குரலே என் சங்கீதம்

மலர்கள் கூட

அன்பே
காதலில் மட்டும்தான்
மலர்கள் கூட
ஆயுதாமாகின்றன

வாழ்வதென்றால்

அன்பே
நான் நரகத்தில் கூட
சந்தோசமாய் வாழ்வேன்
உன்னுடன் வாழ்வதென்றால்

நீ பிரிந்தால்

அன்பே
வானத்தை நிலவு பிரிந்தால்
அமாவாசை
வானத்தை சூரியன் பிரிந்தால்
இரவு
உடலில் உயிர் பிரிந்தால்
மரணம்
அதுபோல்
என்னை நீ பிரிந்தால்
நான் பிணம்

தூண்டியது

அன்பே
பிரிவில்தான்
நேசம் வளருமாம்
உண்மைதான்
உன்மேல் எனக்கு
அதிக நேசத்தை
தூண்டியது