Saturday, May 7, 2011

எப்படி?

"காதலுக்கு கண் இல்லையாம் ....
ஆனால்
கண்ணீர் மட்டும் எப்படி....!

பிரிவு

பிரியும் காதல் எல்லாம் பொய்
காதல் அல்ல,
சேரும் காதல் எல்லாம் மெய்
காதல் அல்ல,
காதல் என்றும் பிரிவதில்லை
காதலிப்பவர்கள் தான்
பிரிகிறார்கள்

குற்றவாளிதான்

காதலிப்பது குற்றம்
என்றால்...
காதலிக்க வேண்டும்
என்று உணர்வை
கொடுத்த " கடவுளும் "
குற்றவாளிதான்....

என் இதயத்திற்கு

" துடிப்பதை விட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு....

புரிவதில்லை

" காரணம் இல்லாமல் காதல்
வருவதில்லை...
அந்த காரணம்தான்
யாருக்கும் புரிவதில்லை..."

உன் மெளனம்

நீ பேசும் வார்த்தை
எல்லாருக்கும் புரியும்,
ஆனால்
உன் மெளனம்
உன்னை
நேசிப்போருக்கு
மட்டுமே புரியும்

என் நிழல்

" எங்கு
பார்த்தாலும்
காதலர்கள்.....
என்னைதான் ,
காதலிக்க யாரும்
இல்லை............!
என்று
திரும்பினால்...


என்னையும் காதலிக்கிறது.......

என்
நிழல்............!

வெற்றி & தோல்வி

" முதல் காதலில் ஜெயித்தவனுக்கு
அதுதான் கடைசி வெற்றி".
" முதல் காதலில் தோற்றவனுக்கு
அதுதான் கடைசி தோல்வி".....

இமைகள் சொன்னது

" உன்னை விட்டு பிரிய
மனம் இல்லை எனக்கு,
அதனால்தான் நினைக்கும்
உன்னை தொட்டு செல்கிறேன்".
விழிகளிடம் இமைகள் சொன்னது.....!

சுவாசிப்பாளா?

காற்றே என் மீது உரசி கொண்டு போ......
என்னைதான் அவள் நேசிக்கவில்லை,
என்னை தொட்ட உன்னையாவது
அவள்
சுவாசிப்பாளா என்று பார்ப்போம்

மெளனமாகிறாள்

உதடுகளின் பிரிவை கூட அவளால்,
தாங்க முடிவதில்லை.
அதனால் தான் என்னவோ,
என்னை பார்க்கும் போதெல்லாம்,
மெளனமாகிறாள்....!

மெளனமாகிறாள்

உதடுகளின் பிரிவை கூட அவளால்,
தாங்க முடிவதில்லை.
அதனால் தான் என்னவோ,
என்னை பார்க்கும் போதெல்லாம்,
மெளனமாகிறாள்....!

உலகம்

உலகம் என்பதில்

நீ ஒரு சின்ன ஜீவன்

ஆனால்

யாரோ

ஒரு ஜிவனுக்கு நீதான் உலகம்