Thursday, June 23, 2011

பறிகொடுத்து விடுவேனோ

அன்பே
வானம் நிலவை
பறிகொடுத்து விடுகிறது
அமாவாசைக்காக
கண்கள் உறக்கத்தை
பறிகொடுத்து விடுகிறது
விழிப்பிற்க்காக
நாசி காற்றை
பறிகொடுத்து விடுகிறது
சுவாசித்திற்க்காக
அதுபோல்
நானும் உன்னை
பறிகொடுத்து விடுவேனோ
என் தந்தையின் கண்டிப்புக்காக

அழிந்திடாத காதல்

என் இனிய பிரியமானவளே
எழுதப்படாத கவிதை நீ
வரையப்படாத ஓவியம் நீ
பருகப்படாத நீர் நீ
உதிர்ந்திடாத புஷ்பம் நீ
சுவாசிக்காத காற்று நீ
அதுபோல்
என் இதயங்களில்
அழிந்திடாத காதல் நீ

நீ என்னை

அன்பே
உன் கண்ணில்
நான் என்
கனவுகளைப் புதைப்பேன்
உன் மார்பில் நான் என்
ஆசைகளைப் புதைப்பேன்
உன் வார்த்தைகளில்
நான் என்
மொழிகளைப் புதைப்பேன்
உன் மடியில்
நான் என் முகம் புதைப்பேன்
நீ என்னை
மண்ணில் புதைக்காமலிருந்தால்

ஆயுள் முழுவதும்

என் இனியவளே
நான் கண்ணிமைக்க
ஒரு நொடி போதும்
ஆனால் அன்பே
நான் உன்னுடன்
வாழ்ந்திட என்
ஆயுள் முழுவதும் வேண்டும்

நீ எங்கே

அன்பே
உந்தன் நினைவுகள்
மட்டும் என்னில்
பத்திரமாய் உள்ளன
ஆனால் என் உயிரே
நீ எங்கே
இதமான தென்றல் காற்று
தீண்டினால் - நீ
தீண்டிய ஞாபகம்
குயிலின் ஒசையைக்
கேட்கும் போதெல்லாம் - நீ
பேசிய ஞாபகம்
அழகான மலரைப்
பார்க்கும்பொழுதெல்லாம் - உந்தன்
முகம் ஞாபகம்
நிலவு இரவைப்
பிரியும் போது - நீ
என்னைப்பிரிந்த ஞாபகம்
உந்தன் நினைவுகள்
மட்டும் என்னில்
ஞாபகமாய் இருக்க
நீ எங்கே அன்பே

உனக்காக

அன்பே
நான்
சிரிப்பதும் உனக்காக
அழுவதும் உனக்காக
வாழ்வதும் உனக்காக
சாவதும் உனக்காக
உனக்காக மட்டும்தான்

போராடுகிறேன்

அன்பே
வாழ்க்கை
ஒரு போர்க்களம்
அதில் நான்
உனக்காக
போராடிக் கொண்டிருக்கிறேன்