Wednesday, August 17, 2011

வேண்டுமா


விழிகளுக்கு பார்க்க
கற்றுக் கொடுக்க வேண்டுமா ?
இமைகளுக்கு இமைக்க
கற்றுக் கொடுக்க வேண்டுமா ?
இதயத்திற்கு துடிக்க
கற்றுக் கொடுக்க வேண்டுமா ?
உதட்டுக்கு பேசக்
கற்றுக் கொடுக்க வேண்டுமா ?
கால்களுக்கு நடக்க
கற்றுக் கொடுக்க வேண்டுமா ?
அதுபோல் அன்பே
காதலிக்க
கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன ?

உண்மைதான்


அன்பே
உன் நினைவில்
நான்
இந்த உலகத்தையே
மறந்து விட்டேன் என்றேன்
நான் மண்ணில் நடக்கவில்லை
பறக்கிறேன் என்றேன்
என் இதயம்
உன் பெயர் சொல்ல
துடிக்கிறது என்றேன்
யாரும் நம்பவில்லை
என்னை பைத்தியம் என்று
சொல்கிறார்கள்
உண்மைதான் அன்பே
எனக்கு பைத்தியம்
உன்மேல் தான்
அவர்களும் காதல் செய்தால்
தான் தெரியும்
நான் சொல்வது
உண்மைதான் என்று