Wednesday, August 17, 2011

உண்மைதான்


அன்பே
உன் நினைவில்
நான்
இந்த உலகத்தையே
மறந்து விட்டேன் என்றேன்
நான் மண்ணில் நடக்கவில்லை
பறக்கிறேன் என்றேன்
என் இதயம்
உன் பெயர் சொல்ல
துடிக்கிறது என்றேன்
யாரும் நம்பவில்லை
என்னை பைத்தியம் என்று
சொல்கிறார்கள்
உண்மைதான் அன்பே
எனக்கு பைத்தியம்
உன்மேல் தான்
அவர்களும் காதல் செய்தால்
தான் தெரியும்
நான் சொல்வது
உண்மைதான் என்று

No comments:

Post a Comment