Monday, August 15, 2011

விடுமா என்ன ?


அன்பே
கண்களுக்குள் எண்ணெய் விட்டால்
பார்வையை பறித்திட முடியுமா ?
கடல் நீரை மோந்தால்
கடலை வற்ற வைத்திட முடியுமா ?
காற்றுக்கு வேலிஇட்டால்
சுவாசத்தை நிறுத்திவிட முடியுமா ?
பூக்களை மறைத்தால்
வாசத்தை போக்கிட முடியுமா ?
அது போல்
என்னை உன்னிடமிருந்து பிரித்தால்
நம் காதலை அழித்திட முடியுமா ?
கண்களை கட்டிக்கொண்டால்
உலகம் இருண்டு விடுமா என்ன ?
கவிதை எழுதா விட்டால்
காதலர்கள் இல்லையன்றாகி
விடுமா என்ன ?
அது போல் அன்பே
நான் உன்னை விட்டு
ஓரிரு நாட்கள் விலகியிருந்தால்
உன்னை பிரிந்து விட்டேன்
என்றாகி விடுமா என்ன ?

No comments:

Post a Comment