Thursday, October 28, 2010

காதல் என்பது

காதல் என்பது
அழகான ஓவியம்
அதை வரையத் தெரிந்தவன்
புத்திசாலி
தெரியாதவன்
அத்ர்ஷ்டசாலி

என்னை பார்த்ததுக்காக

ஆயிரம் முறை
கண்ணாடியில் பார்த்தேன்
என்னை
அவள் ஒரு முறை
என்னை பார்த்ததுக்காக

நட்பில் மட்டும்தான்

நொடி கணக்கில் மௌனம்
நிமிட கணக்கில் சிரிப்பு
மணி கணக்கில் அரட்டை
காலம் தோறும் இன்பம்
இது எல்லாம்
நட்பில் மட்டும்தான்

நான் உன்னை சந்தித்தபோது

மலரின் புன்னகை தென்றல்
வரும்போது
இரவின் புன்னகை நிலவு
வரும்போது
என் இதயத்தின் புன்னகை
நான் உன்னை சந்தித்தபோது

உன்னைத் தேடி வரும்

ஒரு உயிரை நீ நேசிப்பது
நிஜம் என்றால்
அதை பறவை போல
பறக்க விடு
அது
உன்னை நேசிப்பது நிஜம்
என்றால் மீண்டும்
உன்னைத் தேடி வரும்

சொந்தம்

முத்துக்கு சொந்தம் சிப்பி
முள்ளுக்கு சொந்தம் ரோஜா
நீ யாருக்கு சொந்தமானாலும்
உன் நட்பு எனக்கு சொந்தம்

நினைக்காதே

உன்னை நேசிக்கும் பெண்ணை
சாகும் வரை மறக்காதே
உன்னை மறந்த பெண்ணை
இருக்கும் வரை நினைக்காதே

நட்பாக

மரணம் வந்தாலும் உன்னை
மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால்
அதில் நீ வேண்டும்
உருவாக அல்ல
என் உயிர் நட்பாக...