அன்பே
வண்டாய் இருந்திருந்தால்
தெரிந்திருக்காது
மெல்லிய மலராய்
உன் மனதின் மென்மை
தேவை அப்போது
தேன் மட்டுமாய் இருந்திருக்கும்
இதழ் மேல் படிந்த
காலைப் பனித்துளியாய்
உன்னில் நான்
சில காலமே இருந்து
கால் வெயிலாய் பிரிந்தாலும்
எனக்கு தெரியுமடி
உம் மனதின் மென்மை
No comments:
Post a Comment