Thursday, May 17, 2012

என் மனதைப்போல



என் இனியவளே
உதிர்ந்து விடும் எனத்தெரிந்தும்
மலரைச் சுமக்க
செடி மறுப்பதில்லை
தேய்ந்து விடும் எனத்தெரிந்தும்
நிலவைச் சுமக்க
வானம் மறுப்பதில்லை
இறந்து விடும் எனத்தெரிந்தும்
உயிரைச் சுமக்க
உடல் மறுப்பதில்லை
மறைந்து விடும் எனத்தெரிந்தும்
பனித்துளியை சுமக்க
புல்வெளி மறுப்பதில்லை
மறைந்து விடுவாய் எனத்தெரிந்தும்
உன் நினைவுகளை
சுமக்க மறக்காத
என் மனதைப் போல