என்னுள்ளும் ஒரு குழந்தை!!
முன்பொரு நாள்
கோயிலில் கண்ட காட்சி..
ஒரு வயதே ஆன
குழந்தை ஒன்று..!
அவனை,
கையில் சுமந்தபடி
அவன் தாய்!
நம்மின் ஒவ்வொரு
விரல் அசைவும்
அவள் பழக்கிவிட்டது தானே!!
இதோ..
அக்குழந்தையும் பழகுகிறது
கடவுளை வணங்கிட..!
அப்போது..
பிஞ்சு கரங்களைக்
கூப்பும் முயற்சியில்
அந்த தாய்!
முத்தமிட்டுக் கொள்ளும்
தன் கைகளை
ஆவலாய் பார்க்கும்
அக்குழந்தை!
இனமறியா..
ஒரு சிரிப்பு வேறு அதற்கு!!
தனது
கைகளை மட்டும்
கடவுளுக்கு கூப்பிவிட்டு..
கண்களால்
அவன் தாயை
தரிசிக்கிறது அப்பிஞ்சு!
தாய்மையும்,
மழலைத்தனமும்..
எனை வென்று விட்ட
கனம் அதில்..
என்னுள்ளும்
ஒரு குழந்தை மெல்ல,
எட்டிப்பார்த்து சிரிக்கிறது!
கண்ணில், சிறு துளிகளுடன்..!!
No comments:
Post a Comment