Wednesday, July 28, 2010

எதற்க்காக ?


அன்பே
உன்னை கண்ட நாள்முதல்
என் விliகள்
உன்னை பார்க்க துடிக்கிறது
என் சுவாசமோ
உன் சுவாசக்காற்றை
சுவாசிக்க துடிக்கிறது
என் உதடுகளோ
உன்னிடம் பேச துடிக்கிறது
என் காதுகளோ
உன் பேச்சை கேட்கத் துடிக்கிறது
சரி அன்பே அது போகட்டும்
எதற்க்காக என் இதயத்தை
எடுத்துச் சென்று விட்டு
உன் இதயத்தை வைத்தாய்
எதற்ககாக ?

என்ன உறவு ?


அன்பே
நான் உன்னை பார்க்கும் போது
உன் மீது ச்ந்தேகம் வந்தது
நீ எனக்காகத்தான் காத்திருக்கிறாய்
என்று தெரியhமல்

ஆமாம் அன்பே
உன் மீது சந்தேககப்பட‌
நான் யார் ?
உனக்கும் எனக்கும்
என்ன உறவு ?

Tuesday, July 27, 2010

உன் நினைவே


கண்மணியே
உனக்காக எழுதுகிறேன்
எனக்காக படித்துவிடு
நீ காற்று எழுதிய காதல் ஓவியம்
இது என் உயிர் வரைந்த காவியம்
கனவிலும், நினைவிலும்
தெரிவது உன் முகமே
பிடித்தவற்றை பார்க்கும் போதும்
படித்தவற்றை கேட்கும் போதும்
கண்முன் வருவது உன் நினைவே

காலம்


அன்பே
உன் வருகைக்காக
காத்திருப்பது அந்த காலம்
ஆனால்
உன் தொலைப்பேசி அlzhiப்பிற்க்காக
காத்திருப்பது இந்த காலம்

Monday, July 26, 2010

மறுக்கிறேன்


அன்பே
என் விzhiகளுக்கு வாய்
இருந்திருந்தால்
என் காதலை உன்னிடம்
சொல்லியிருக்கும்
ஆனால் அன்பே
எனக்கு வாய் இருந்தும்
உன்னிடம் சொல்ல மறுக்கிறேன்

என்ன உறவு ?

அன்பே
நான் உன்னை பார்க்கும் போது
உன் மீது ச்ந்தேகம் வந்தது
நீ எனக்காகத்தான் கத்திருக்கிறாய்
என்று தெரியhமல்

ஆமாம் அன்பே
உன் மீது சந்தேககப்பட‌
நான் யார் ?
உனக்கும் எனக்கும்
என்ன உறவு ?

நீ இல்லாத பொழுதுகளில்


நீ இல்லாத
அந்தப் பொழுதுகளில்...

வானம்
கருமையைப் பூசிக் கொண்டு
கண்ணீர் விடக் காத்திருக்கும்...
வானவில்லை ஒடித்து
வாசல் ஓரம் போட்டிருக்கும்
காற்று...

மனதோரம்
ஒரு மெல்லிய இழையாய்
ஏக்கம்
சோகப் பாடலை
முணுமுணுத்துக் கொண்டிருக்கும்
காலண்டர் தாள்கள்
வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும்
தன்னைக் கிழித்துப் போட
கரங்களை எதிர்பார்த்து...

போர்வைக்குள்
தூக்கம் திணறிக் கொண்டிருக்கும்
உன் அணைப்பை எண்ணி..
செல்போன் குறுந்தகவல்கள்
எல்லாமே
குற்றமாய்தான் போகும்
உன் பெயர் இல்லாமல்!
அழைக்கும் குரல்கள்
உன் வாசம் இல்லாமல்
வாடையை முகத்தில் வீசிவிட்டுப்
போகும்!

தொலைக்காட்சிகள்
அலைகளை மாற்றி மாற்றி
வெறுத்துப் போய் ....
கண்களை மூடிக் கொள்ளும்....

நீ இல்லாத பொழுதுகள்..

தாய்வீட்டுக்கு போவதாய்
நீ சொல்லில் செல்லும்
போதெல்லாம்....

நீ இல்லாத பொழுதுகள்

என்னை நானே தொலைத்த
வனாந்திரங்கள்!!!

Tuesday, July 20, 2010

Textile மாணவனின் காதல் கடிதம

அன்புள்ள
அoகான Fabric லே என் படிப்புக்கு ஊட்டம் தந்த Weaving லே

என் வயதை பாதியாக மாற்ற வந்த Garments லே Blowroomலே

சிக்கிகொண்டு தவிக்கும் Fibre போல் என் இதயம் உன்

மனச்சிறையில் சிக்கிகொண்டு தவிக்கிறது. அன்பே நீ தான் என்

காதலி எனக்காட்ட நீ அனுமதித்தால் என் இதயத்தை Doubling

செய்த நூலைக் கட்டி இOத்து காட்டுவேன் இவ்வாறு நீ காட்டு

என்று சொன்னால் மட்டுமே அன்பே. கண்ணே Fabric Analysisயை

பார்த்து மயங்கி விடாதே அவன் உன் முகம் பார்த்து

பேசுவதுபோல் உன் உடம்பை Analysis செய்து விடுவான்.
அன்பே அடுத்த வாரம் நாம் இருவரும் Spinning Frameகளின்

இடையில் சந்தித்து கொள்வதை யாரிடமும் சொல்லி

விடாதே.இந்த Letterயை உன் அண்ணனாகிய Knittingட‌ம்

காட்டி விடாதே , அவன் என்னை கோணிப்பையில் வைத்து Stitch

செய்து ஆற்றில் விட்டு விடுவான்.அன்பே குறிப்பாக நீ வரும்போது

உன் தங்கை Dyeing கூட்டி வந்து விடாதே .அவள் நம் காதலை

Bleaching செய்து கலர் போட்டு காட்டிவிடுவாள்.
அன்பே இந்த கடிதத்தை படித்துவிட்டு பதிலை Printingஆன உன்

தோopயிடம் கொடுத்தனுப்பு , அப்போதுதான் நீ அனுப்பிய பதில்

என்று நான் அறிந்து கொள்ளமுடியும். அன்பே சொல்ல மறந்து

விட்டேன் உன் மாமன் Testingக்கு தெரியாமல் பார்த்துக்கொள் ,

இல்லையெனில் , நம் காதலை Testing செய்து, குறை

கண்டுபிடித்து பிரித்தே விடுவான்

மிக மிக கவனம் அன்பே
இப்படிக்கு
உன் அன்புக் காதலன்

உன்னை கேட்கமாலேயே

அன்பே
உன்னை பார்க்காமலா
பார்த்து பார்த்து ரசித்தேன்
நீ பேசாமலா உன் பேச்சை
கேட்டு ரசித்தேன்
ஆனால்
அன்பே என்னை மன்னித்துவிடு
காரணம்
உன்னை கேட்கமாலேயே
காதலித்து விட்டேன்

நட்பு

நட்பு என்பது இதயம் போல

நமக்கு தெரியமால்

நமக்காக துடிக்கும்

Poem

என்னுள்ளும் ஒரு குழந்தை!!
முன்பொரு நாள்
கோயிலில் கண்ட காட்சி..

ஒரு வயதே ஆன
குழந்தை ஒன்று..!

அவனை,
கையில் சுமந்தபடி
அவன் தாய்!

நம்மின் ஒவ்வொரு
விரல் அசைவும்
அவள் பழக்கிவிட்டது தானே!!
இதோ..
அக்குழந்தையும் பழகுகிறது
கடவுளை வணங்கிட..!

அப்போது..

பிஞ்சு கரங்களைக்
கூப்பும் முயற்சியில்
அந்த தாய்!

முத்தமிட்டுக் கொள்ளும்
தன் கைகளை
ஆவலாய் பார்க்கும்
அக்குழந்தை!

இனமறியா..
ஒரு சிரிப்பு வேறு அதற்கு!!

தனது
கைகளை மட்டும்
கடவுளுக்கு கூப்பிவிட்டு..
கண்களால்
அவன் தாயை
தரிசிக்கிறது அப்பிஞ்சு!

தாய்மையும்,
மழலைத்தனமும்..
எனை வென்று விட்ட
கனம் அதில்..

என்னுள்ளும்
ஒரு குழந்தை மெல்ல,
எட்டிப்பார்த்து சிரிக்கிறது!
கண்ணில், சிறு துளிகளுடன்..!!