Thursday, October 28, 2010

காதல் என்பது

காதல் என்பது
அழகான ஓவியம்
அதை வரையத் தெரிந்தவன்
புத்திசாலி
தெரியாதவன்
அத்ர்ஷ்டசாலி

என்னை பார்த்ததுக்காக

ஆயிரம் முறை
கண்ணாடியில் பார்த்தேன்
என்னை
அவள் ஒரு முறை
என்னை பார்த்ததுக்காக

நட்பில் மட்டும்தான்

நொடி கணக்கில் மௌனம்
நிமிட கணக்கில் சிரிப்பு
மணி கணக்கில் அரட்டை
காலம் தோறும் இன்பம்
இது எல்லாம்
நட்பில் மட்டும்தான்

நான் உன்னை சந்தித்தபோது

மலரின் புன்னகை தென்றல்
வரும்போது
இரவின் புன்னகை நிலவு
வரும்போது
என் இதயத்தின் புன்னகை
நான் உன்னை சந்தித்தபோது

உன்னைத் தேடி வரும்

ஒரு உயிரை நீ நேசிப்பது
நிஜம் என்றால்
அதை பறவை போல
பறக்க விடு
அது
உன்னை நேசிப்பது நிஜம்
என்றால் மீண்டும்
உன்னைத் தேடி வரும்

சொந்தம்

முத்துக்கு சொந்தம் சிப்பி
முள்ளுக்கு சொந்தம் ரோஜா
நீ யாருக்கு சொந்தமானாலும்
உன் நட்பு எனக்கு சொந்தம்

நினைக்காதே

உன்னை நேசிக்கும் பெண்ணை
சாகும் வரை மறக்காதே
உன்னை மறந்த பெண்ணை
இருக்கும் வரை நினைக்காதே

நட்பாக

மரணம் வந்தாலும் உன்னை
மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால்
அதில் நீ வேண்டும்
உருவாக அல்ல
என் உயிர் நட்பாக...

Saturday, October 23, 2010

கிடைப்பதில்லை...!

முதல் காதலை அடைய
முயற்சிக்கும்போது
அதற்குறிய தகுதி
நம்மிடம் இருப்பதில்லை..

எல்லா தகுதிகலையும்
அடைந்துவிட்டபிறகு
முதல் காதல்
கிடைப்பதில்லை...!

Saturday, September 11, 2010

சுமக்க முடிவதில்லை

அன்பே
நுliந்த போது கூட
கணம் இல்லை
ஆனால்
நீ என் இதயத்தை விட்டு
செனறு விடுவாயோ என்று
நினைக்கும் போது மட்டும்
கணத்தை சுமக்க முடிவதில்லை

Saturday, August 7, 2010

உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும் ?

அண்மையில் இணையத்தில் உலாவும்போது ஒரு இணையதளத்துக்கு செல்ல கிடைத்தது. அது சோதிடம் சம்பந்தப்பட்ட ஒரு இணையதளம். எனக்கு சோதிடத்தில் பெரிதளவு நாட்டம் இல்லை என்றாலும் சிறிது உள்ளே சென்று மேலோட்டமாக பார்த்தேன். அவ்வாறு தேடுபோது தான் ஒரு சுவாரசிய விடயம் கிடைத்தது. அதை எனது வலை பதிவு வாசகர்களோடு பகிருகிறேன். அதாவது உங்கள் ராசிக்கும் காதலுக்கும் எப்படி பொருந்துகிறது என்பது தன. ஆனால் எனக்கு என்னுடைய ராசி என்ன என்பது தெரியாது...... எனவே எனக்கு பிரச்சினை இல்லை... தொடருங்க...


மேஷம்:
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வார். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்காமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கபடுவார்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கைதேர்ந்தவர்களாக இருப்பார். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருப்பார்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்பு துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பார்கள். மிதுன ராசிக்காரர்கள் தங்களை தாங்களே ரசிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிகாரர்களுக்கு துலாம் ராசிகாரர்களுடன் நல்ல தாம்பத்தியம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேடை ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்:
இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் குழந்தைகள், உறவினர்கள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்தியத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிகாரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:
சிம்ம ராசிகாரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உண்டு. இவர்களது இதயத்தில் பல விடயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்கமாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றயவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக்கொள்ளமாட்டர்கள். ரொமாண்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசி பெண்கள் தங்களுடைய கணவருடன் இனிமையான காதல் வாழ்கையை வாழ்வார். சிம்ம ராசிக்காரர்கள் யாரை வேண்டுமானாலும் தன பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுபாட்டிட்குள்ளும் வைத்திருப்பார். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்படமாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.

கன்னி:
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுவர். காதலையும், அன்பையும் உடலளவில் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விடயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குணம் உடையவர்கள். அனால் இந்த குணம் உள்ளவர்கள் இலட்ச்சியத்தை கடைபிடிக்கமாட்டர்கள். இவர்களுக்கு அன்புசன்தொசத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷத்தில் வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரகூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்:
எப்போதும் அடாவடியாக பேசிகொண்டிருக்கும் இவர்கள் யாரும் எதிர்கொள்ளத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்ததல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குனமிருக்கது. விருச்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிக சிறப்பாக இருக்கும்.


விருச்சிகம்
விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பலகுபவர்களிடமுள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக்கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னை பார்க்க வேண்டுமென நினைப்பதால் இவருக்கு காதல் என்பது ஒரு எட்டாத கனியாகதான் இருக்கும். இவர்களது வயது ஆகா ஆகா காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பவராகவும் இருப்பார். எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றும் தாம்பத்திய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் அதிலிருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுதும் சந்தோசமாகவும், அமைதியாகவும் இருப்பார்.

தனுசு
இவர்கள் காதல் வெற்றியடையும். காதலில் திறமைசாலியாக இருப்பார்கள். இவர்களது இலட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றியடைய அதிகம் கஷ்டபடுவர். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும் பகுதியை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவர். காதல் எண்ணம் அதிகமாக இருக்கும். துணையை வெகுவாக விரும்புவர். அவரின்பால் அதிக அன்பை செலுத்துவர். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிகாரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிகாரர்களுடன் காதல் வயப்பபடுவர்.

மகரம்
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்கமாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவார். தனுசு ராசிகாரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிகாரர்களுக்கு காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலர்களாக இருப்பார். ஆனால் காதல் தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலை பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பார். இவர்களது கற்பனை வித்தியாசமாக இருக்கும். புரிந்துகொள்வதும், புரிந்து வைத்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிகாரர்களுக்கு எதிர்பாலாருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்
மீனா ராசிகாரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களது வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருக்கும். மீன ராசிக்காரர்களின் சுபாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிகாரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் செய்து முடிப்பர். இந்த ராசிக்காரர் உணர்ச்சியை தரக்கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்க முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிகாரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.

நிலா!

இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!

நீ வந்து

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

Wednesday, July 28, 2010

எதற்க்காக ?


அன்பே
உன்னை கண்ட நாள்முதல்
என் விliகள்
உன்னை பார்க்க துடிக்கிறது
என் சுவாசமோ
உன் சுவாசக்காற்றை
சுவாசிக்க துடிக்கிறது
என் உதடுகளோ
உன்னிடம் பேச துடிக்கிறது
என் காதுகளோ
உன் பேச்சை கேட்கத் துடிக்கிறது
சரி அன்பே அது போகட்டும்
எதற்க்காக என் இதயத்தை
எடுத்துச் சென்று விட்டு
உன் இதயத்தை வைத்தாய்
எதற்ககாக ?

என்ன உறவு ?


அன்பே
நான் உன்னை பார்க்கும் போது
உன் மீது ச்ந்தேகம் வந்தது
நீ எனக்காகத்தான் காத்திருக்கிறாய்
என்று தெரியhமல்

ஆமாம் அன்பே
உன் மீது சந்தேககப்பட‌
நான் யார் ?
உனக்கும் எனக்கும்
என்ன உறவு ?

Tuesday, July 27, 2010

உன் நினைவே


கண்மணியே
உனக்காக எழுதுகிறேன்
எனக்காக படித்துவிடு
நீ காற்று எழுதிய காதல் ஓவியம்
இது என் உயிர் வரைந்த காவியம்
கனவிலும், நினைவிலும்
தெரிவது உன் முகமே
பிடித்தவற்றை பார்க்கும் போதும்
படித்தவற்றை கேட்கும் போதும்
கண்முன் வருவது உன் நினைவே

காலம்


அன்பே
உன் வருகைக்காக
காத்திருப்பது அந்த காலம்
ஆனால்
உன் தொலைப்பேசி அlzhiப்பிற்க்காக
காத்திருப்பது இந்த காலம்

Monday, July 26, 2010

மறுக்கிறேன்


அன்பே
என் விzhiகளுக்கு வாய்
இருந்திருந்தால்
என் காதலை உன்னிடம்
சொல்லியிருக்கும்
ஆனால் அன்பே
எனக்கு வாய் இருந்தும்
உன்னிடம் சொல்ல மறுக்கிறேன்

என்ன உறவு ?

அன்பே
நான் உன்னை பார்க்கும் போது
உன் மீது ச்ந்தேகம் வந்தது
நீ எனக்காகத்தான் கத்திருக்கிறாய்
என்று தெரியhமல்

ஆமாம் அன்பே
உன் மீது சந்தேககப்பட‌
நான் யார் ?
உனக்கும் எனக்கும்
என்ன உறவு ?

நீ இல்லாத பொழுதுகளில்


நீ இல்லாத
அந்தப் பொழுதுகளில்...

வானம்
கருமையைப் பூசிக் கொண்டு
கண்ணீர் விடக் காத்திருக்கும்...
வானவில்லை ஒடித்து
வாசல் ஓரம் போட்டிருக்கும்
காற்று...

மனதோரம்
ஒரு மெல்லிய இழையாய்
ஏக்கம்
சோகப் பாடலை
முணுமுணுத்துக் கொண்டிருக்கும்
காலண்டர் தாள்கள்
வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும்
தன்னைக் கிழித்துப் போட
கரங்களை எதிர்பார்த்து...

போர்வைக்குள்
தூக்கம் திணறிக் கொண்டிருக்கும்
உன் அணைப்பை எண்ணி..
செல்போன் குறுந்தகவல்கள்
எல்லாமே
குற்றமாய்தான் போகும்
உன் பெயர் இல்லாமல்!
அழைக்கும் குரல்கள்
உன் வாசம் இல்லாமல்
வாடையை முகத்தில் வீசிவிட்டுப்
போகும்!

தொலைக்காட்சிகள்
அலைகளை மாற்றி மாற்றி
வெறுத்துப் போய் ....
கண்களை மூடிக் கொள்ளும்....

நீ இல்லாத பொழுதுகள்..

தாய்வீட்டுக்கு போவதாய்
நீ சொல்லில் செல்லும்
போதெல்லாம்....

நீ இல்லாத பொழுதுகள்

என்னை நானே தொலைத்த
வனாந்திரங்கள்!!!

Tuesday, July 20, 2010

Textile மாணவனின் காதல் கடிதம

அன்புள்ள
அoகான Fabric லே என் படிப்புக்கு ஊட்டம் தந்த Weaving லே

என் வயதை பாதியாக மாற்ற வந்த Garments லே Blowroomலே

சிக்கிகொண்டு தவிக்கும் Fibre போல் என் இதயம் உன்

மனச்சிறையில் சிக்கிகொண்டு தவிக்கிறது. அன்பே நீ தான் என்

காதலி எனக்காட்ட நீ அனுமதித்தால் என் இதயத்தை Doubling

செய்த நூலைக் கட்டி இOத்து காட்டுவேன் இவ்வாறு நீ காட்டு

என்று சொன்னால் மட்டுமே அன்பே. கண்ணே Fabric Analysisயை

பார்த்து மயங்கி விடாதே அவன் உன் முகம் பார்த்து

பேசுவதுபோல் உன் உடம்பை Analysis செய்து விடுவான்.
அன்பே அடுத்த வாரம் நாம் இருவரும் Spinning Frameகளின்

இடையில் சந்தித்து கொள்வதை யாரிடமும் சொல்லி

விடாதே.இந்த Letterயை உன் அண்ணனாகிய Knittingட‌ம்

காட்டி விடாதே , அவன் என்னை கோணிப்பையில் வைத்து Stitch

செய்து ஆற்றில் விட்டு விடுவான்.அன்பே குறிப்பாக நீ வரும்போது

உன் தங்கை Dyeing கூட்டி வந்து விடாதே .அவள் நம் காதலை

Bleaching செய்து கலர் போட்டு காட்டிவிடுவாள்.
அன்பே இந்த கடிதத்தை படித்துவிட்டு பதிலை Printingஆன உன்

தோopயிடம் கொடுத்தனுப்பு , அப்போதுதான் நீ அனுப்பிய பதில்

என்று நான் அறிந்து கொள்ளமுடியும். அன்பே சொல்ல மறந்து

விட்டேன் உன் மாமன் Testingக்கு தெரியாமல் பார்த்துக்கொள் ,

இல்லையெனில் , நம் காதலை Testing செய்து, குறை

கண்டுபிடித்து பிரித்தே விடுவான்

மிக மிக கவனம் அன்பே
இப்படிக்கு
உன் அன்புக் காதலன்

உன்னை கேட்கமாலேயே

அன்பே
உன்னை பார்க்காமலா
பார்த்து பார்த்து ரசித்தேன்
நீ பேசாமலா உன் பேச்சை
கேட்டு ரசித்தேன்
ஆனால்
அன்பே என்னை மன்னித்துவிடு
காரணம்
உன்னை கேட்கமாலேயே
காதலித்து விட்டேன்

நட்பு

நட்பு என்பது இதயம் போல

நமக்கு தெரியமால்

நமக்காக துடிக்கும்

Poem

என்னுள்ளும் ஒரு குழந்தை!!
முன்பொரு நாள்
கோயிலில் கண்ட காட்சி..

ஒரு வயதே ஆன
குழந்தை ஒன்று..!

அவனை,
கையில் சுமந்தபடி
அவன் தாய்!

நம்மின் ஒவ்வொரு
விரல் அசைவும்
அவள் பழக்கிவிட்டது தானே!!
இதோ..
அக்குழந்தையும் பழகுகிறது
கடவுளை வணங்கிட..!

அப்போது..

பிஞ்சு கரங்களைக்
கூப்பும் முயற்சியில்
அந்த தாய்!

முத்தமிட்டுக் கொள்ளும்
தன் கைகளை
ஆவலாய் பார்க்கும்
அக்குழந்தை!

இனமறியா..
ஒரு சிரிப்பு வேறு அதற்கு!!

தனது
கைகளை மட்டும்
கடவுளுக்கு கூப்பிவிட்டு..
கண்களால்
அவன் தாயை
தரிசிக்கிறது அப்பிஞ்சு!

தாய்மையும்,
மழலைத்தனமும்..
எனை வென்று விட்ட
கனம் அதில்..

என்னுள்ளும்
ஒரு குழந்தை மெல்ல,
எட்டிப்பார்த்து சிரிக்கிறது!
கண்ணில், சிறு துளிகளுடன்..!!