அன்பே
பொறுத்தார் பூமியாழ்வார்
என்று சொல்வார்கள்
நானும் பொறுத்திருக்கிறேன்
பூமியை அல்ல
உன்னையாழ........
உன்னை நிலவென்று
சொல்ல மாட்டேன்
பகலில் இருப்பதில்லை
உன்னை சூரியன்
என்று சொல்ல மாட்டேன்
இரவில் இருப்பதில்லை
உன்னை நட்சத்திரம்
என்று சொல்ல மாட்டேன்
அது பலன் தருவதில்லை
உன்னை காற்று என்று
சொல்ல மாட்டேன் என்று
எப்போதும் சொல்ல மாட்டேன்
ஆம் ! ஏனென்றால்
என் சுவாசம் நீதானடி.......................... !
No comments:
Post a Comment