Sunday, March 3, 2013

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்



ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

 அதற்கு அந்த ஞானி, ''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி

 என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி
 வரக் கூடாது. ''என்றார்.கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, ''எங்கே உன்னைக் கவர்ந்த
 உயரமான செடி? ''என்று கேட்டார். சீடன் சொன்னான், 'குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி
 என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள்
 தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான
 ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல்



போய் விட்டது.







' புன்முறுவலோடு ஞானி சொன்னார்,''இது தான் காதல்.''







பின்னர் ஞானி,''சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப்



பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.''



சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார்,''இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய



காந்திச் செடியா? ''சீடன் சொன்னான், 'இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை



விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப்



பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு



இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.'







இப்போது ஞானி சொன்னார், ''இது தான் திருமணம்.''..

Thursday, May 17, 2012

என் மனதைப்போல



என் இனியவளே
உதிர்ந்து விடும் எனத்தெரிந்தும்
மலரைச் சுமக்க
செடி மறுப்பதில்லை
தேய்ந்து விடும் எனத்தெரிந்தும்
நிலவைச் சுமக்க
வானம் மறுப்பதில்லை
இறந்து விடும் எனத்தெரிந்தும்
உயிரைச் சுமக்க
உடல் மறுப்பதில்லை
மறைந்து விடும் எனத்தெரிந்தும்
பனித்துளியை சுமக்க
புல்வெளி மறுப்பதில்லை
மறைந்து விடுவாய் எனத்தெரிந்தும்
உன் நினைவுகளை
சுமக்க மறக்காத
என் மனதைப் போல

Wednesday, November 23, 2011

கனவு + காதல்

இரண்டு கண்கள் சேர்ந்து கண்டால் கனவு
நான்கு கண்கள் சேர்ந்து கண்டால் காதல்

Sunday, November 20, 2011

உன் நினைவு

அன்பே
பூவெல்லாம் உன் வாசம்
கண்களெல்லாம் உன் கனவு
காற்று அனைத்தும் உன் சுவாசம்
பாதையெல்லாம் உன் பாத சுவுடுகள்
ஓசைகளில் எல்லாம் உன் குரல்
அது போல்
என் நெஞ்சமெல்லாம் உன் நினைவு

போய்விடுவாயோ ?

அன்பே
நான்
வலியால் துடிக்கும் போது
உனது பெயரை உச்சரிக்கிறேன்
வலி காணாமல் போய்விடுகிறது
பசியால் வாடும்போது
உனது பெயரை உச்சரிக்கிறேன்
பசி காணாமல் போய்விடுகிறது
அதுபோல்
நான்
காதலார் தவிக்கும்போது
உனது பெயரை உச்சரிக்கிறேன்
அதனால்
நீயும் காணாமல் போய்விடுவாயோ ?

பிரிக்க நினைத்தானோ

அன்பே
கண்களிருந்தால் கனவுகள்
இருக்கும்
மனமிருந்தால் ஆசைகள் இருக்கும்
உதடுகள் இருந்தால்
வார்த்தைகள் இருக்கும்
அதுபோல்
இதயம் இருந்தால் அதில்
காதல் இருக்கும்
அதனால்தான்
நான் உன்னை காதலிக்கிறேன்
கடவுள் இருந்தால் அதில்
சதி இருக்கும்
அதனால்தான்
உன்னை என்னிடமிருந்து
பிரிக்க நினைத்தானோ....!

என் கல்லறை

அன்பே
நான் உன்னுடன்
இணையாமல்
இறந்து போனாலும்
அப்போது
என்னிடம் உள்ள
உன் நினைவுகள்
மட்டும் காத்திருக்கும்
என் கல்லறையில்

Wednesday, October 19, 2011

அன்புக்காக

அன்பே
தேனுக்காக
பூவை வட்டமிடுவது
வண்டுகள்
அதுபோல்
அன்புக்காக
உன்னை வட்டமிடுவது
நான் !.........

Monday, October 10, 2011

கொடுப்பாயா ?

எனக்கு சொந்தமானவளே
தவமாய் தவமிருந்தால் கடவுள்
வரம் கொடுப்பாராம் ...
அதுபோல்
நானும் உனக்காக
காதல் தவமிருக்கிறேன்
நீ எனக்கு
கல்யாண வரம் கொடுப்பாயா ?
இல்லை
கல்லறை வரம் கொடுப்பாயா ?

அணையா விளக்கு

என் இனியவளே
வானம் என்பது
பூமிக்கு தூரம்தான்
மெளனம் என்பது
வார்த்தைக்கு தூரம்தான்
பார்வை என்பது
குருடனுக்கு தூரம்தான்
அதுபோல் அன்பே
தூரத்தில் பார்க்கும் பொழுது
இருப்பதாகவும்
அருகில் வரும் பொழுது
மறைந்து விடும்
கானல் நீர் அல்ல
நம் காதல்
அது எப்போதும்
சுடர் விட்டெரியும்
அணையா விளக்கு

இணைவேன்

அன்பே
பிரிவு உறுதியானது
என்பது தெரிந்த பின்பும்
என் மனம்
உன்னையே நாடுகிறது.....
ஏனெனில்
என் அடிமனதில்
ஒரு நம்பிக்கை
நான் உன்னுடன்
இணைவேன் என்று

போகின்றாய்

அன்பே
நீ இல்லாமல் எனது வானம்
எப்போது அமவாசையாகவே
இருக்கின்றது
எப்போது நீ வந்து பெளர்ணமி
ஆக்கப் போகின்றாய்

Wednesday, October 5, 2011

கொலுசுச்சத்தம்

தூரத்தில் ஓடும் ரெயிலின்
சத்தம்
சலசலக்கும் இலைகளின்
சரிகமபதநி சத்தம்
ராகத்தோடு கூவும்
குயிலின் சத்தம்
இவை யாவையும் மீறி
என்னை எழுப்பியது
என் வீட்டு ஜன்னல்
ஓரத்தில் கேட்ட உன்
கொலுசுச்சத்தம்

மூச்சு நிற்பதற்குள்

அன்பே
திருடிய இதயத்தை
திருப்பிக் கொடுத்துவிடு
உன் இதயம்
அல்லது
என் இதயம்
மூச்சு நிற்பதற்குள்

நிறுத்தி விடு

அன்பே
சிதறிய சில்லறைகளை
எடுக்க முடிவதில்லை
தவிக்கிறேன்
நிறுத்தி விடு
உன் சிரிப்பை

Tuesday, October 4, 2011

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

நினைவு அறிந்த நாள் முதல்
நினைவிருக்கும் இன்று வரை
பெற்றெடுத்த மகிழ்ச்சியில்
தாய் கொண்டாட
வளர்த்த மகிழ்ச்சியில்
தந்தை கொண்டாட
நினைக்க நேரமில்லை
என்ற வேலைப்பளு காரணத்திலும்
நினைவோடு கொண்டாடுவது
பிறந்த நாள் மட்டுமே
அந்தவொரு இனிய பிறந்த நாளை
கொண்டாடும் என் நண்பனுக்கு ( நிவாஸ் )
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

Saturday, October 1, 2011

ஒன்று சேர்த்துவிடு


என் இனியவளே
என்னை எனக்கு
மிகவும் பிடிக்கும்
ஏனெனில்
என்னை நீ
விரும்பியவள் ஆயிற்றே
அதானால்தான்
பூமியைக்
காற்று பிரிவதில்லை
சூரியனை
வெப்பம் பிரிவதில்லை
கண்களை
இமை பிரிவதில்லை
கடலை
அலைகள் பிரிவதில்லை
அதுபோல்
உலகில் எந்த
காதலர்களும் பிரியக்கூடாது
கடவுளே காதலர்களையும்
ஒன்று சேர்த்து விடு

தழுவ வேண்டும்


அன்பே
என் கண்கள்
உறக்கத்தை தழுவுகின்றன
என் உதடுகள்
புன்னகையைத் தழுவுகின்றன
என் நாசிகள்
காற்றைத் தழுவுகின்றன
என் உடல்
உடையை தழுவுகின்றன
அது போல்
என்னை நீ தழுவ வேண்டும்
இல்லையேல்
நான் மரணம் தழுவ வேண்டும்

Sunday, September 25, 2011

உன்னோடுதான்

அன்பே
உன்னை
சூரியன் என்று சொல்கிறேன்
நீ என்னை
எரித்துச் சாம்பலாக்கினாலும்
என் காதல்
உன்னோடுதான்

Saturday, September 10, 2011

காதலிப்பேன்


அன்பே
நீ நீராக இருந்தால்
நான் மீனாய் மாறி காதலிப்பேன்
நீ மலராய் இருந்தால்
மணமாய் மாறி காதலிப்பேன்
நீ கண்களாயிருந்தால்
இமையாய் மாறி காதலிப்பேன்
நீ உதடுகளாயிருந்தால்
வார்த்தைகளாக மாறி காதலிப்பேன்
நீ வானமாக இருந்தால்
மேகமாய் மாறி காதலிப்பேன்
நீ சூரியனாக இருந்தால்
வெப்பமாய் மாறி காதலிப்பேன்
நீ கடலாக இருந்தால்
அலையாய் மாறி காதலிப்பேன்
நீ கவிதையாயிருந்தால்
வார்த்தைகளாக மாறி காதலிப்பேன்
நீ கல்லறையாயிருந்தால்
நான் பிணமாய் மாறி காதலிப்பேன்

Wednesday, September 7, 2011

உன்னோடுதான்


உயிரே
விட்டில் பூச்சியின் ஆயுள்
ஒரு நாள் மட்டுமாயிருந்தாலும்
அதன் வாழ்க்கை விளக்கோடுதான்
அதுபோல்
என் ஆயுள்
ஒரு நாள் மட்டுமாயிருந்தாலும்
என் வாழ்க்கை உன்னோடுதான்